• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்டம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 02.08.2025 அன்று பழங்குடியினர் பண்பாட்டு மையம், கார்டன் ரோடு உதகையில் நடைபெறவுள்ளது.

02/08/2025 02/08/2025 பார்க்க (38 KB)
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 05.08.2025 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

25/07/2025 05/08/2025 பார்க்க (384 KB)
ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

நீலகிரி மாவட்டம்; சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-ற்கு கீழ்க்கண்ட பணியிடத்திற்கு பணியாளர்களை  ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால், பின்வரும் தகுதிகளுடன் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

22/07/2025 31/07/2025 பார்க்க (54 KB)
சுபாஷ் சந்திரபோஸ் ஆப்த பிரபந்தன் புரஸ்கார் விருது – 2026

பேரிடர் மேலாண்மைத் துறையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் செய்த சிறந்த பணிகளை அங்கீகரிக்க இந்திய அரசு “சுபாஷ் சந்திரபோஸ் அப்த பிரபந்தன் புரஸ்கார்” என்ற வருடாந்திர தேசிய விருதை வழங்கவுள்ளது.

இந்த விருதுக்கான விண்ணப்பங்களை (https://awards.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

21/05/2025 30/09/2025 பார்க்க (49 KB)
ஆவணகம்