அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையத்தில் வேலைவாய்ப்பு | நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இயங்கி வரும் மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவைகள் மையத்தில் காலியாக உள்ள ஆரோக்கிய தொழில்முறை நிபுணர், சமூக பணியாளர், மற்றும் நடத்தை சிகிச்சைக்கான சிறப்பு கல்வியாளர் பதவிகளுக்கு முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் -23.01.2025 (வியாழக்கிழமை) அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. |
08/01/2025 | 23/01/2025 | பார்க்க (302 KB) |
குழந்தைகள் நலக்குழுவிற்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் | 2015ம் ஆண்டின் இளைஞர் நீதிச்(குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக் குழுக்களுக்கு தலைவர் (ம) உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
21/11/2024 | 04/12/2024 | பார்க்க (593 KB) |
வீடற்ற நகர்ப்புற ஏழைகளுக்கு தங்கும் விடுதியினை நடத்திட அரசு சாரா அமைப்பினர் மூலம் உரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்.27, முள்ளிக்கொரை பகுதியில் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டம் DAY – NULM Shelter for Urban Homeless வீடற்ற நகர்ப்புற ஏழைகளுக்கு தங்கும் விடுதியினை நடத்திட அரசு சாரா அமைப்பினர் மூலம் உரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
03/10/2024 | 08/10/2024 | பார்க்க (384 KB) |
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் போதை மீட்பு மையத்தில் வேலைவாய்ப்பு | நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் போதை மீட்பு மையத்தில் உள்ள பதவிகளில் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிப்புரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 31.08.2024 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. |
17/08/2024 | 31/08/2024 | பார்க்க (411 KB) |
நீலகிரி மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் – வேலைவாய்ப்பு | நீலகிரி மாவட்டத்தில் ஓமியோபதித்துறை , அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள பதவிகளில் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிப்புரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 14.08.2024 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன. |
29/07/2024 | 14/08/2024 | பார்க்க (942 KB) |
தணிக்கையாளர் சேர்பட்டியல் | நீலகிரி மாவட்டத்தில் உள்ள சமுதாய அமைப்புகள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் தணிக்கை செய்திடும் பொருட்டு தணிக்கையாளர்களை தேர்வு செய்வதற்கான விதிமுறைகள் வரப்பெற்றுள்ளது. |
02/08/2024 | 12/08/2024 | பார்க்க (1 MB) |
தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்கள் | நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உதகை மு.பாலாடா ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு ஆசிரியர் தற்காலிகமாக தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. |
30/07/2024 | 10/08/2024 | பார்க்க (32 KB) |
ஓட்டுநர் வேலைவாய்ப்பு | தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்தின் நிதி உதவியோடு செயல்படுத்தப்படும் நடமாடும் நம்பிக்கை மையம் வாகனத்திற்கு ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
30/07/2024 | 07/08/2024 | பார்க்க (176 KB) |
கர்ப்பிணிகள் தங்களது கர்ப்பத்தை சுய பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் | நீலகிரி மாவட்டத்தில், ஜூலை 22 முதல் ஜூலை 27 வரை அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுயமாக கர்ப்பத்தை பதிவு செய்யும் முகாம்கள் நடைபெற்று வருகிறது. |
22/07/2024 | 27/07/2024 | பார்க்க (52 KB) |
“உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் | “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டமானது மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களால் பந்தலூர் வட்டத்தில் 24.07.2024 அன்று நடைபெறவுள்ளது. |
24/07/2024 | 25/07/2024 | பார்க்க (38 KB) |