• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
திருநங்கைகளின் குறைதீர்க்கும் முகாம்

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உரிய வழிகாட்டுதலோடு திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்திட ஏதுவாய் மாதந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
எனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள் 11.08.2023 அன்று மாவட்ட சமூகநல அலுவலகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்

11/08/2023 11/08/2023 பார்க்க (23 KB)
ஆவின் பிரீமியம் பசும்பால் (500 மி.லிட்டர்) பாக்கெட் இளஞ் சிவப்பு நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும்

நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்/ உதகமண்டலம் ஒன்றியத்தில் விற்பனை செய்யப்படும் பிரீமியம் பசும்பால் (500 மி.லிட்டர்) பாக்கெட் தற்போதைய நிறமான ஆரஞ்சு நிறத்திற்கு பதிலாக நாளை 28.06.2023 முதல் 05.08.2023 வரை இளஞ் சிவப்பு நிற பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் அப்பாலின் தரத்தில் எந்த மாற்றமும் இல்லை (தரம் 3.5% மற்றும் 8.5%) என ஆவின் பொது மேலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

28/06/2023 05/08/2023 பார்க்க (24 KB)
முதல் கட்ட “கலைஞர் மகளிர் உரிமை திட்டம்”  விண்ணப்பப் பதிவு முகாம்கள்

நீலகிரி மாவட்டத்தில், முதல் கட்ட “கலைஞர் மகளிர் உரிமை திட்டம்”  விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும் நாட்கள் மற்றும் இடங்கள்

24/07/2023 04/08/2023 பார்க்க (59 KB)
முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கு எதிர் வரும் 03.08.2023 (வியாழக்கிழமை) அன்று முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் நடத்தப்படவுள்ளது.

03/08/2023 03/08/2023 பார்க்க (36 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் ஜூலை 2023-ம் மாதத்தில் 28.07.2023 அன்று காலை 11.00 மணி அளவில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

28/07/2023 28/07/2023 பார்க்க (48 KB)
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா

தமிழ்நாடு அரசு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா நீலகிரி மாவட்டத்தில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் தலைமையில் வருகின்ற 25.07.2023 அன்று பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி குன்னூரில் நடைபெறவுள்ளது

25/07/2023 25/07/2023 பார்க்க (35 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 21.07.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது

21/07/2023 21/07/2023 பார்க்க (32 KB)
இசை, நடன,நாடகக்கலைஞர்கள் மற்றும் பழங்குடியினர் பாரம்பரிய கலைஞர்களுக்கு அரசு விருதுகள்

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இசை, நடன,நாடகக்கலைஞர்கள் மற்றும் பழங்குடியினர் பாரம்பரிய கலைஞர்களுக்கு அரசு விருதுகள் மாவட்டஆட்சியர் அறிவிப்பு

20/06/2023 15/07/2023 பார்க்க (34 KB)
கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம்

நீலகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களின் மூலம் அனைத்து கிராமங்களிலும் 15.06.2023 முதல் 14.07.2023 வரை இரண்டாம் தவணை “கன்று வீச்சு நோய் (Brucellosis) தடுப்பூசி முகாம்” நடைப்பெற உள்ளது.

15/06/2023 14/07/2023 பார்க்க (204 KB)
சிறப்பு மெகா கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்

நீலகிரி மாவட்டத்தில், கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ‘சிறப்பு மெகா கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்” நடத்த தெரிவித்ததனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம், உதகை ஒன்றியம் மசினகுடி மற்றும் கூடலூர் ஒன்றியம் தேவர்சோலை ஆகிய கிராமங்களில் முறையே 27.06.2023 மற்றும் 12.07.2023 தேதிகளில் ‘சிறப்பு மெகா கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்” நடத்தப்பட உள்ளன.

27/06/2023 12/07/2023 பார்க்க (36 KB)