மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
திருநங்கையர்களுக்கான ஒருநாள் சிறப்பு முகாம்

சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் ஒரே நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் பொருட்டு நீலகிரி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் இதர நலத்திட்ட சேவைகள் வழங்கும் துறைகளின் சார்பில் 21.06.2024 அன்று கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருநங்கையர்களுக்கான ஒருநாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

21/06/2024 21/06/2024 பார்க்க (105 KB)
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) தீர்ப்பாயம் அமர்வு

மாண்புமிகு திரு.நீதிபதி புருஷைந்திர குமார் கவுரவ், நீதிபதி, தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) தீர்ப்பாயம், 18.06.2024 மற்றும் 19.06.2024 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு குன்னூர் மவுண்ட் ரோட்டில் உள்ள நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் காலை 10.00 மணி முதல் அமர்வு நடைபெறும். சாட்சியமளிக்க ஆர்வமுள்ள அனைவரும், கீழே கையொப்பமிடப்பட்டவர்களிடம் தங்கள் பிரமாணப் பத்திரங்களை (இரண்டு நகலில்) தாக்கல் செய்யலாம் மற்றும் மாண்புமிகு தீர்ப்பாயத்தில் குறுக்கு விசாரணைக்காக மேற்கண்ட தேதியில் நேரில் ஆஜராக வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

18/06/2024 19/06/2024 பார்க்க (203 KB)
மஞ்சப்பை விருது 2023-24

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், இடைக்கால முயற்சிகள் மற்றும் வெளிப்புற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தில் முன்மாதிரியான பங்களிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்கள் (பள்ளிகள் & கல்லூரிகள்) மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்க உத்தேசித்துள்ளது. 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் தங்கள் வளாகத்தில் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்தும் சிறந்த வணிக நிறுவனங்களுக்கு இந்த விருது வழங்கப்படும். முதல் பரிசாக ரூ. 10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 5 லட்சம் மற்றும் ரூ. 3 லட்சம் மூன்றாம் பரிசாக வழங்கப்படும். சிறந்த பிளாஸ்டிக் இல்லாத பள்ளி/கல்லூரி/வணிக நிறுவனங்களை உருவாக்குவதற்கான அளவுகோல்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.

19/01/2024 01/05/2024 பார்க்க (4 MB)
பசுமை சாம்பியன் விருது 2023

மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் அவர்களால் சட்டமன்ற பேரவையில் 03.09.2021 அன்று வெளியிட்ட அறிவிப்பின் படி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்தபங்களிப்பாற்றியவர்களுக்காக “பசுமை சாம்பியன் விருது” என்ற விருதினை 2021-22 ஆண்டிலிருந்து ருபாய் ஒரு கோடி மதிப்பிலான பரிசுத்தொகையினை வழங்கி வருகின்றது. இதன்படி மாநிலத்தில் 100 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஒரு லட்சம் பரிசு தொகையாக வழங்கப்படவுள்ளது.

12/01/2024 15/04/2024 பார்க்க (42 KB)
முதுநிலை ஆலோசகர் மற்றும் சமூக நல தனியாளர்

நீலகிரி மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-க்கு முதுநிலை ஆலோசகர் மற்றும் சமூக நல தனியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால், தகுதிகளுடன் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

08/03/2024 22/03/2024 பார்க்க (194 KB)
மூன்றாம் சுற்று “கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம்”

நீலகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களின் மூலம் அனைத்து கிராமங்களிலும் 15.02.2024 முதல் 15.03.2024 வரை மூன்றாம் சுற்று “கன்று வீச்சு நோய் (Brucellosis) தடுப்பூசி முகாம்” நடைப்பெற உள்ளது.

15/02/2024 15/03/2024 பார்க்க (40 KB)
மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெற அறிய வாய்ப்பு

நீலகிரி மாவட்ட உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் உதவி உபகரணங்கள் பெற 22.02.2024 வியாழக்கிழமை கூடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் 23.02.2024 வெள்ளிகிழமை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கார்டன் சாலை உதகையிலும் மற்றும் 27.02.2024 செவ்வாய்கிழமை குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறவுள்ளது.

22/02/2024 27/02/2024 பார்க்க (28 KB)
முன்னாள் படைவீரர் / சார்ந்தோர்களுக்கான சிறப்புகுறைதீர்க்கும் நாள் கூட்டம்

முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 26.02.2024 (திங்கள் கிழமை) அன்றுகாலை 11.00 மணிக்கு மாவட்டஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் நடத்தப்படவுள்ளது.

26/02/2024 26/02/2024 பார்க்க (32 KB)
உயர்தர தொழில் சார் சேவைகளை வழங்க தகுதியான மகளிர் தொழில் முனைவோரை கண்டறியும் முகாம்

தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான ‘வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது’ ஊரக மகளிரின் தொழில் முனைவுகளை மேம்படுத்தவும், நிதி சேவை, வேலை வாய்ப்பு உருவாக்குதல் மற்றும் பிற தொழில் சேவைகளையும் வழங்கி வருகிறது. நமது நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டமானது நான்கு வட்டாரங்களில் 35 ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில், இயங்கி வரும் மகளிர் தொழில் முனைவோர் தங்கள் தொழில்களில் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உயர்தர சேவைகளையும் ஒரே நிலையத்தில் பெற, தகுதியான மகளிர் தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்யவும் முகாம் வருகின்ற 17-02-2024 சனிக்கிழமை அன்று மாவட்ட மேலாண்மை அலுவலகத்தில் தமிழ்நாடு ஊராக புத்தாக்க திட்டத்தின் சார்பில் நடைபெறுகிறது.

17/02/2024 17/02/2024 பார்க்க (43 KB)
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்டத்தில் பிப்ரவரி 2024-ம் மாதத்தில் 16.02.2024 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.

16/02/2024 16/02/2024 பார்க்க (37 KB)