அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
‘நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி | குன்னூர் மற்றும் கூடலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 17.08.2023 அன்று ‘நமது தொழிற்பயிற்சி நிலையத்தில் நமது சகோதரிகள்’ (Our Sister in Our ITI) விழிப்புணர்வு நிகழ்ச்சி காலை 10 மணியிளவில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. |
17/08/2023 | 17/08/2023 | பார்க்க (53 KB) |
இரண்டாம் கட்ட “கலைஞர் மகளிர் உரிமை திட்டம்” விண்ணப்பப் பதிவு முகாம்கள் | நீலகிரி மாவட்டத்தில், இரண்டாம் கட்ட “கலைஞர் மகளிர் உரிமை திட்டம்” விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும் நாட்கள் மற்றும் இடங்கள் |
05/08/2023 | 16/08/2023 | பார்க்க (58 KB) |
பெண் பாதுகாப்பு அலுவலர் | சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005-ன் கீழ் பணிபுரிய நீலகிரி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. |
03/08/2023 | 16/08/2023 | பார்க்க (28 KB) |
தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் 2023 | 2022-2023 ஆண்டுக்கான சுற்றுலா விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
03/08/2023 | 15/08/2023 | பார்க்க (61 KB) |
திருநங்கைகளின் குறைதீர்க்கும் முகாம் | சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உரிய வழிகாட்டுதலோடு திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்திட ஏதுவாய் மாதந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. |
11/08/2023 | 11/08/2023 | பார்க்க (23 KB) |
ஆவின் பிரீமியம் பசும்பால் (500 மி.லிட்டர்) பாக்கெட் இளஞ் சிவப்பு நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் | நீலகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்/ உதகமண்டலம் ஒன்றியத்தில் விற்பனை செய்யப்படும் பிரீமியம் பசும்பால் (500 மி.லிட்டர்) பாக்கெட் தற்போதைய நிறமான ஆரஞ்சு நிறத்திற்கு பதிலாக நாளை 28.06.2023 முதல் 05.08.2023 வரை இளஞ் சிவப்பு நிற பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் அப்பாலின் தரத்தில் எந்த மாற்றமும் இல்லை (தரம் 3.5% மற்றும் 8.5%) என ஆவின் பொது மேலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். |
28/06/2023 | 05/08/2023 | பார்க்க (24 KB) |
முதல் கட்ட “கலைஞர் மகளிர் உரிமை திட்டம்” விண்ணப்பப் பதிவு முகாம்கள் | நீலகிரி மாவட்டத்தில், முதல் கட்ட “கலைஞர் மகளிர் உரிமை திட்டம்” விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும் நாட்கள் மற்றும் இடங்கள் |
24/07/2023 | 04/08/2023 | பார்க்க (59 KB) |
முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் | முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் தொழில் முனைவோர் கருத்தரங்கு எதிர் வரும் 03.08.2023 (வியாழக்கிழமை) அன்று முற்பகல் 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களால் நடத்தப்படவுள்ளது. |
03/08/2023 | 03/08/2023 | பார்க்க (36 KB) |
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் | நீலகிரி மாவட்டத்தில் ஜூலை 2023-ம் மாதத்தில் 28.07.2023 அன்று காலை 11.00 மணி அளவில், விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. |
28/07/2023 | 28/07/2023 | பார்க்க (48 KB) |
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா | தமிழ்நாடு அரசு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட அளவில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் இளைஞர் திறன் திருவிழா நீலகிரி மாவட்டத்தில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள், மாண்புமிகு தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் ஆகியோர் தலைமையில் வருகின்ற 25.07.2023 அன்று பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி குன்னூரில் நடைபெறவுள்ளது |
25/07/2023 | 25/07/2023 | பார்க்க (35 KB) |