அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் | நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 21.07.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுகிறது |
21/07/2023 | 21/07/2023 | பார்க்க (32 KB) |
இசை, நடன,நாடகக்கலைஞர்கள் மற்றும் பழங்குடியினர் பாரம்பரிய கலைஞர்களுக்கு அரசு விருதுகள் | நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த இசை, நடன,நாடகக்கலைஞர்கள் மற்றும் பழங்குடியினர் பாரம்பரிய கலைஞர்களுக்கு அரசு விருதுகள் மாவட்டஆட்சியர் அறிவிப்பு |
20/06/2023 | 15/07/2023 | பார்க்க (34 KB) |
கன்று வீச்சு நோய் தடுப்பூசி முகாம் | நீலகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களின் மூலம் அனைத்து கிராமங்களிலும் 15.06.2023 முதல் 14.07.2023 வரை இரண்டாம் தவணை “கன்று வீச்சு நோய் (Brucellosis) தடுப்பூசி முகாம்” நடைப்பெற உள்ளது. |
15/06/2023 | 14/07/2023 | பார்க்க (204 KB) |
சிறப்பு மெகா கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் | நீலகிரி மாவட்டத்தில், கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ‘சிறப்பு மெகா கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்” நடத்த தெரிவித்ததனை தொடர்ந்து நீலகிரி மாவட்டம், உதகை ஒன்றியம் மசினகுடி மற்றும் கூடலூர் ஒன்றியம் தேவர்சோலை ஆகிய கிராமங்களில் முறையே 27.06.2023 மற்றும் 12.07.2023 தேதிகளில் ‘சிறப்பு மெகா கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்” நடத்தப்பட உள்ளன. |
27/06/2023 | 12/07/2023 | பார்க்க (36 KB) |
தபால் துறை ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் | நீலகிரிக் கோட்ட அளவிலான தபால் துறை ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் வரும் 11.07.2023 அன்று காலை 11.00 மணியளவில் நீலகிரிக் கோட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தபால் துறை ஓய்வூதியதாரர்கள் ஏதேனும் குறைகள் இருப்பின் கடிதம் மூலமாக அஞ்சலகக் கண்காணிப்பாளர், நீலகிரிக் கோட்டம், உதகமண்டலம் 643 001 என்ற முகவரிக்கு 05.07.2023-க்குள் சேர்பிக்கும்படி அஞ்சலகக் கண்காணிப்பாளர், நீலகிரிக் கோட்டம் திருமதி.ஆர்.இந்திரா அவர்கள் தெரிவித்துள்ளார். |
11/07/2023 | 11/07/2023 | பார்க்க (34 KB) |
மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு | நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ் கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் 10.07.2023 (திங்கட்கிழமை) அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
|
22/06/2023 | 10/07/2023 | பார்க்க (370 KB) |
ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி | ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி 06-07-2023 மற்றும் 07-07-2023 ஆகிய தேதிகளில் வெலிங்டனில் உள்ள MRC, பிள்ளை அரங்கில் நடைபெறும். |
06/07/2023 | 07/07/2023 | பார்க்க (47 KB) |
பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் | தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறுதல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் தகவல். |
05/07/2023 | 05/07/2023 | பார்க்க (30 KB) |
“அனைவருக்கும் இ-சேவை” திட்டம் | தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில்முனைவோர்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. |
01/06/2023 | 30/06/2023 | பார்க்க (78 KB) |
சிறுதானிய சிற்றுண்டி மையம் | நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் சிறுதானிய சிற்றுண்டி மையம் செயல்படுத்தப்படவுள்ளன. இச்சிற்றுண்டி மையங்களை நடத்திட தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பங்கள் வழங்கலாம் |
22/06/2023 | 30/06/2023 | பார்க்க (39 KB) |