• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:

செ.வெ.எண்:346- அரசு தலைமை கொறடா அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் 5 இணைகளுக்கான திருமணத்தினை நடத்தி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2025

நீலகிரி மாவட்டம் உதகை அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் 5 இணைகளுக்கான திருமணத்தினை அரசு தலைமை கொறடா திரு. கா.ராமச்சந்திரன் அவர்கள் நடத்தி வைத்து சீர் வரிசை பொருட்களை வழங்கினார்.(PDF 34KB)

மேலும் பல

செ.வெ.எண்:345- நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 02/07/2025

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 50KB)

மேலும் பல

செ.வெ.எண்:343- அரசு தலைமை கொறடா அவர்கள் உதகை அரசு கலைக்கல்லூரியில் புதிதாக சேரும் மாணாக்கர்களுக்கு ஒரு வார கால அறிமுகப் பயிற்சி திட்டத்தினை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025

நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரியில் 2025-2026ஆம் ஆண்டு கல்வியாண்டில் கல்லூரிகளில் புதிதாக சேரும் மாணாக்கர்களுக்கு உயர்கல்வி குறித்த அரசின் திட்டங்கள், கல்லூரி சார்ந்த தகவல்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து எடுத்துரைக்கும் வகையிலான ஒரு வார கால அறிமுகப் பயிற்சி திட்டத்தினை அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள், குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.(PDF 128KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:342- நீலகிரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குறைதீர்ப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025

நீலகிரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் குறைதீர்ப்பாளர் (OMBUDSPERSON) திரு. பி. திருமலைசாமி, M.A.M.L.I.S.C., நியமிக்கப்பட்டுள்ளார். எனவே பொது மக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்கள் ஏதும் இருப்பின் அவருடைய கைபேசி எண் 8925811326, மற்றும் மின்னஞ்சல் முகவரி thenilgirisombudsperson@gmail.com. மூலம் புகார் அளிக்கலாம். (PDF 377KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:341- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 18.07.2025 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025

நீலகிரி மாவட்டத்தில் ஜுலை-2025;ம் மாதத்தில் 18.07.2025 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.(PDF 46KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:340- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.06.2025

வெளியிடப்பட்ட நாள்: 30/06/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 173 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 110KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:339- நீலகிரி மாவட்டத்தில் மீன் வளர்ப்பு தொழில் செய்து வரும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2025

நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் பதிவுப் பெற்று மீன் வளர்ப்பு தொழில் செய்து வரும் மீன்வள விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியமாக 1 ஹெக்டேருக்கு 10,000 எண்ணம் மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்வதற்கு 50 சதவிகித மானியம் வழங்கப்படவுள்ளது.(PDF 106KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:338- நீலகிரி மாவட்டத்தில் 7வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்குப் போடும் பணி 02.07.2025 முதல் 31.07.2025 வரை நடைபெற உள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2025

நீலகிரி மாவட்டத்தில், உள்ள சுமார் 21,650 பசு மற்றும் எருமையினங்களை அந்நோயிலிருந்து காக்கும் வண்ணம் கால்நடை பராமரிப்பத்துறை சார்பில், NADCP 7வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி கால்நடைகளுக்குப் (மாட்டினம் (ம) எருமையினம்) போடும் பணி 02.07.2025 முதல் 31.07.2025 வரை நடைபெற உள்ளது.(PDF 107KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:337- இந்திய அரசின் 2024-ம் வருடத்திற்கான “டென்சிங் நார்கே தேசிய சாகச விருது” வழங்கிட விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2025

இந்திய அரசு, ஆண்டுதோறும் ஒருவருக்கு நிலம், நீர் (சமுத்திரம்) மற்றும் ஆகாயத்தில் உயிர் காக்கும் சாகச சாதனை புரிந்தவர்களை கொளரவிக்கும் பொருட்டு 2024-ம் வருடத்திற்கான ‘டென்சிங் நார்கே தேசிய சாகச விருது”க்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி வருகிறது.(PDF 112KB)

மேலும் பல

செ.வெ.எண்:336- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமினை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 28/06/2025

நீலகிரி மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், தொடங்கி வைத்தார்.(PDF 20KB)

மேலும் பல