பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த நீலகிரி மாவட்ட காவல் துறை
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2025கூடலூர் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தந்த நீலகிரி மாவட்ட காவல் துறையினர்(PDF 266KB)
மேலும் பலசெ.வெ.எண்:158- இந்திய இராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்பு 2025 – பதிவு தொடங்கியது
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2025கோயம்புத்தூர் இராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம், இந்திய இராணுவத்தில் அக்னிவீர ஆட்சேர்ப்புக்கான தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.(PDF 29KB)
மேலும் பலசெ.வெ.எண்:157- 29.03.2025 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறுதல்
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2025மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் 29.03.2025 அன்று நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராமஊராட்சிகளிலும் காலை 11.00 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே மேற்கண்ட கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி பொது மக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளார்.(PDF 30KB)
மேலும் பலசெ.வெ.எண்:156- பிரதமர் இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ் திறன் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2025பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் திட்டத்தின் கீழ், இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் திட்டம், 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு வரை படித்து முடித்த 21 -24 வயது வரை உள்ள மாணவ – மாணவியர் https://pmintership.mca.gov என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம்.(PDF 35KB)
மேலும் பலசெ.வெ.எண்:155- ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் ஆலோசனை வழங்குதல்
வெளியிடப்பட்ட நாள்: 25/03/2025ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் 2024-2025 கல்வி ஆண்டு; 12 ஆம் வகுப்புபயிலும் மாணாக்கர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் (Career Guidance) ஆலோசனை வழங்குதல் !!!!(PDF 382KB)
மேலும் பலசெ.வெ.எண்:154- நீலகிரி மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் மூலம் வேலைவாய்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, இணை இயக்குநர் சுகாதாரப்பணிகள், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில், காலியாக உள்ள பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் 15.04.2025 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.(PDF 198KB)
மேலும் பலசெ.வெ.எண்:153- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 24/03/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 180 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 33KB)
மேலும் பலசெ.வெ.எண்:152- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் நீலகிரி மாவட்ட வருகையை முன்னிட்டு இறுதி கட்டப்பணிகள்
வெளியிடப்பட்ட நாள்: 23/03/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், நீலகிரி மாவட்டத்தில் 700 படுக்கை வசதிகளை கொண்ட உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையினை 06.04.2025 அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதை முன்னிட்டு, இறுதி கட்டப்பணிகளை மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள், மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 42KB)
மேலும் பலசெ.வெ.எண்:151- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் நீலகிரி மாவட்ட வருகையை முன்னிட்டு அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 05.04.2025 மற்றும் 06.04.2025 ஆகிய நாட்களில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, உதகை அரசு கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை முன்னிட்டு, மாண்புமிகு அரசு தலைமைக் கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னேற்பாடு பணிகள் குறித்து, அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.(PDF 36KB)
மேலும் பலசெ.வெ.எண்:150- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 05.04.2025 மற்றும் 06.04.2025 ஆகிய நாட்களில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 05.04.2025 மற்றும் 06.04.2025 ஆகிய நாட்களில் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரிந்து, உதகை அரசு கலை கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளதை முன்னிட்டு, விழா நடைபெறும் இடத்தினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு […]
மேலும் பல
