மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:

செ.வெ.எண்:149- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 21/03/2025

நீலகிரி மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 106KB)

மேலும் பல

செ.வெ.எண்:148- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2025

நீலகிரி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், தலைமையில், தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.(PDF 45KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:147- அன்னை சத்யா குழந்தைகள் இல்லக் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை மற்றும் விளையாட்டு பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2025

நீலகிரி மாவட்டத்தில் இயங்கி வரும் அன்னை சத்யா குழந்தைகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை மற்றும் விளையாட்டு பயிற்சி வழங்கிட, பயிற்சி பெற்ற நபரை நியமித்து குழந்தைகளுக்கு பயிற்சி வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.(PDF 53KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:146- முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2025

நீலகிரி மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வைப்புத்தொகை பத்திரம் பெற்றவர்களில் 19 வயது கடந்தும் முதிர்வுத்தொகை கோரத 122 பயனாளிகளின்  பெயர்;பட்டியல் நீலகிரி மாவட்ட இணையதளமான nilgiris.nic.in. என்னும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. (PDF 51KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:145- “முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்”

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்காக பிரத்யேகமாக காக்கும் கரங்கள் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அதிக பட்சமாக ஒரு கோடி ரூபாய வரை வங்கிக் கடன் பெறலாம்.(PDF 81KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:144- தாட்கோ மூலம் இளநிலை பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி வழங்கப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2025

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த இளநிலை பொறியியல் பட்டதாரி இளைஞர்களுக்கு புத்தாக்க பொறியாளர் பயிற்சி (Innovation Fellowship Program) வழங்கப்படவுள்ளது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு. இ.ஆ.ப. அவர்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள்.(PDF 58KB)

மேலும் பல
08

செ.வெ.எண்:143- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குந்தா வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2025

நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு துறையின் சார்பில் நடைப்பெற்று வரும் வளர்ச்சிச் திட்டப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, 9 பயனாளிகளுக்கு ரூ.13,000/- மதிப்பிட்டு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 28KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:142- அனைத்து கிராம ஊராட்சி பொதுமக்களும் தங்களது வரிதொகை செலுத்தி ரசீது பெற்றுகொள்ளலாம்

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025

நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நிலுவை மற்றும் நடப்பாண்டிற்கான வீட்டுவரி, குடிநீர்கட்டணம், தொழில்வரி மற்றும் தொழில் உரிமகட்டணம் தற்போது வசூல் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து கிராம ஊராட்சி பொதுமக்களும் வரும் 31-ம் தேதிக்குள் வரியினங்களை செலுத்த வேண்டியது கட்டாயக்கடமையாகும்.(PDF 38KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:141- நியாய விலை கடையில் உள்ள P.O.S இயந்திரத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் கைரேகையினை பதிவு செய்திட வேண்டும்

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025

நீலகிரி மாவட்டம் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகையினை வருகிற மார்ச் 31-ம் தேதிக்குள் நியாய விலை கடையில் உள்ள P.O.S இயந்திரத்தில் பதிவு செய்திட வேண்டும் என திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 46KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:140- சங்கமம்-நம்ம ஊரு திருவிழா

வெளியிடப்பட்ட நாள்: 18/03/2025

தமிழ்நாடு அரசு கலைபண்பாட்டுத் துறையின் சார்பில் சங்கமம்-நம்ம ஊரு திருவிழாவிற்கான கலைக்குழுக்கள் தேர்வு நீலகிரி மாவட்டத்தில் மார்ச் 22 மற்றும் 23 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது.(PDF 60KB)

மேலும் பல