செ.வெ.எண்:50- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்திடும் வகையில், அரசுத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 31/01/2025நீலகிரி மாவட்டத்தில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை பணிகள் குறித்து, அரசுத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 112KB)
மேலும் பலசெ.வெ.எண்:49- கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
வெளியிடப்பட்ட நாள்: 31/01/2025நீலகிரி மாவட்டத்தில் சிசுமரணத்தை குறைப்பதற்கும், மகப்பேறு மரணத்தை தடுப்பதற்கும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 56KB)
மேலும் பலசெ.வெ.எண்:48- நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
வெளியிடப்பட்ட நாள்: 31/01/2025நீலகிரி மாவட்டத்தில், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்து, சாலை பாதுகாப்பு குறித்தான துண்டு பிரசுரங்களை ஆட்டோ மற்றும் கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 41KB)
மேலும் பலசெ.வெ.எண்:47- ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்கு பணியாளர் காலிப்பணியிடம்
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2025நீலகிரி மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-க்கு வழக்கு பணியாளர், (Case Worker) ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால், தகுதிகளுடன் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF 55KB)
மேலும் பலசெ.வெ.எண்:46- கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2025நீலகிரி மாவட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கால்நடை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள் மற்றும் கால்நடை கிளை நிலையங்களின் மூலம் அனைத்து கிராமங்களிலும் வரும் 01.02.2025 முதல் 14.02.2025 வரை ‘இருவார கோழி கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்” நடைப்பெறுகிறது. (PDF 202KB)
மேலும் பலசெ.வெ.எண்:45- நலிந்த கலைஞர்களுக்கு உதவித்தொகை
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2025சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறையின் மூலம் நலிந்த நிலையில் வாழும் வயோதிக கலைஞர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு நலிந்த கலைஞர் நிதியுதவி திட்டத்தினை அரசு செயல்படுத்தி வருகிறது.(PDF 19KB)
மேலும் பலசெ.வெ.எண்:44- பந்தலூர் ஊராட்சி ஒன்றியத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டம் 30.01.2025
வெளியிடப்பட்ட நாள்: 30/01/2025நீலகிரி மாவட்டத்தில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் பந்தலூர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் உணவு வகைகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.(PDF 23KB)
மேலும் பலசெ.வெ.எண்:43- படித்த வேலை வாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 28/01/2025தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் படித்த வேலை வாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.(PDF 56KB)
மேலும் பலசெ.வெ.எண்:42- இளைஞர்கள் திறன் பயிற்சி திட்டம் குறித்து பல்வேறு மாநிலங்களின் மண்டல அளவிலான கருத்தரங்கு.
வெளியிடப்பட்ட நாள்: 27/01/2025ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் தீன்தயாள் உபாத்யாய கிராமப்புறதிறன் பயிற்சி திட்டம் மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனங்களின் 2.0 வடிவத்துடன் 2025-26 ஆம் ஆண்டிற்கான செயல் திட்டங்கள் குறித்த பல்வேறு மாநிலங்கள் அடங்கிய மண்டல அளவிலான திட்டமிடல் கருத்தரங்கின் துவக்க விழா இன்று (27.01.2025) நீலகிரியில் நடைபெற்றது. (PDF 36KB)
மேலும் பலசெ.வெ.எண்:40- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குடியரசு தினவிழா கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 26/01/2025நீலகிரி மாவட்டத்தில் குடியரசு தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.(PDF 37KB)
மேலும் பல