ஊடக வெளியீடுகள்

Filter by:
001 copy

செ.வெ.எண்:495- சிறப்பு கிராம சபை கூட்டம் தும்மனட்டி ஊராட்சியில் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட நாள்: 02/10/2026

நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், தும்மனட்டி ஊராட்சி குந்தசப்பை சமுதாய கூட வளாகத்தில், அண்ணல் காந்தியடிகள் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (02.10.2026) நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து கொண்டார்.  (PDF 43KB)

DSC_0025_1 copy

செ.வெ.எண்:494- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

வெளியிடப்பட்ட நாள்: 02/10/2026

நீலகிரி மாவட்டம், உதகை, சேரிங்கிராஸ் கதர் அங்காடியில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று (02.10.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் அண்ணல் காந்தியடிகளின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, கதர் விற்பனையை துவக்கி வைத்தார். (PDF 56KB)

DSC_0004_3 copy

செ.வெ.எண்:493- வெற்றிப் பயணம் திட்டம் தொடக்க விழா

வெளியிடப்பட்ட நாள்: 02/10/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (02.10.2026) சென்னை, கோயம்பேடு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலைய வளாகத்தில் வெற்றிப் பயணம் திட்டத்தினை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டம்,உதகை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் கலந்து கொண்டார். (PDF 58KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:492- நீலகிரி மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடை பொருட்கள் விநியோகம்

வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026

மாண்புமிகு தமிழ்நாடு  முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் அக்டோபர்2026 மாதத்திற்கு  03.10.2026 மற்றும் 05.10.2026 ஆகிய நாட்களில் வழங்கப்படும். இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.  (PDF 28KB)

DSC_0793 copy

செ.வெ.எண்:490- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 01/10/2026

உதகை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தும்மனட்டி, பரலட்டி, கூக்கல், கக்குச்சி ஆகிய ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 60KB)  

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:489- தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயணம் பௌத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வெளியிடப்பட்ட நாள்: 30/09/2026

தமிழகத்தில் உள்ள பௌத்த சிறுபான்மையினர் நாக்பூர் தீக்ஷா பூமியில் விஜயதசமி அன்று நடைபெறும் தம்ம சக்கர பரிவர்தன திருவிழாவிற்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்புபவர்களுக்கான நிதி வழங்கும் திட்டம் – நிதி உதவி கோரி விண்ணப்பிக்கலாம்   (PDF 333KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:488- நீலகிரி மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி (02.10.2026) தினத்தை முன்னிட்டு மதுக் கடைகள் மூடல்

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள்த) விதிகள், 2003 விதி எண்.12 மற்றும் நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் எப்.எல்.1 மதுபான சில்லறை விற்பனை கடைகள், எப்.எல்.2 கிளப் பார்கள்,எப்.எல்.3 ஓட்டல் பார்கள் மற்றும் எப்.எல்.3ஏ ஆகியவற்றில் எதிர்வரும் காந்தி ஜெயந்தி நாளான (02.10.2026)-ஐ முன்னிட்டு எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது எனவும் மேற்படி நாளில் கட்டாயமாக டாஸ்மாக் சில்லரை விற்பனை கடைகள், கிளப்கள், ஓட்டல் பார்கள் தமிழ்நாடு ஓட்டல்களில் உள்ள பார்கள் […]

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:487 – விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 16.10.2026 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 29/09/2026

நீலகிரி மாவட்டத்தில் அக்டோபார்-2026ம் மாதத்தில் 16.10.2026 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உதகமண்டலம், பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. (PDF 413KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:486- தபால் துறை ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026

நீலகிரி கோட்டஅளவிலான தபால் துறை ஓய்வூதியதாரர்களின் குறை தீர்க்கும் நாள் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளி கிழமை அன்று நடைபெறவுள்ளது.  (PDF 444KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:485- இதர பிற்படுத்தப்பட்டோர். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026

ஒன்றிய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ/ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI – Top class education in schools for OBC, EBC & DNT students) செயல்படுத்தப்பட்டு வருகிறது. (PDF 251KB)