மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:201- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 24.01.2025 வெள்ளிக்கிழமை அன்று நடத்தப்படவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 22/04/2025

உதகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக, தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்திற்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 25.04.2025 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கூடுதல் ஆட்சியர் வளாகம், பிங்கர்போஸ்ட், உதகையில் நடத்தப்படவுள்ளது.(PDF 41KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:200- நீலகிரி மாவட்டத்தில் இ-பாஸ் நடைமுறை 22.04.2025 முதல் அமலுக்கு வருகிறது

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2025

மாண்பமை சென்னை உயர்நீதி மன்ற உத்திரவின்படி, நீலகிரி மாவட்டத்திற்கு வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை 22.04.2025 முதல் அமலுக்கு வருகிறது. எனவே மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் மாண்பமை சென்னை உயர்நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட அறிவுரையின்படி பின்வரும் நுழைவு வாயில்களில் மட்டும் இ-பாஸ் நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவித்துள்ளார். 1. கல்லாறு 2. குஞ்சப்பணை 3. மசினகுடி 4. மேல்கூடலூர்(PDF 18KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:199- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கோடை கால பயிற்சி முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2025

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கோடை கால பயிற்சி முகாம் மூலம் திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வகையில் அவர்களை தயார்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் பயிற்சி முகாம் 25.04.2025 முதல் 15.05.2025 வரை நடத்தப்படவுள்ளது.(PDF 127KB)

மேலும் பல
03

செ.வெ.எண்:198- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.04.2025

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 215 மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 27KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:197-கலைஞர் கைவினைத் திட்டத்தில் (KKV) தொழிற்கடன் பெற்று தொழில் துவங்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அழைப்பு…

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2025

கலைஞர் கைவினைத் திட்டத்தில் (KKV) தொழிற்கடன் பெற்று தொழில் துவங்க மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அழைப்பு…(PDF 48KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:196- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருநங்கைகளும் விடியல் பயணத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2025

தமிழ்நாட்டில் மலைப்பகுதிகளில் வாழும் திருநங்கைகளும், திருநங்கைகள் நலவாரியத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையுடன் சாதாரண கட்டணப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்க ஏதுவாக விடியல் பயணத் திட்டமானது விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே நீலகிரி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள்,திருநங்கைகள் நலவாரியத்தால் வழங்கப்படும் அடையாள அட்டையைக் கொண்டு விடியல் பயணத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. லட்சுமிபவ்யாதண்ணீரு. இ.ஆ.ப. அவர்கள் இத்தகவலை தெரிவித்துள்ளார்கள்.(PDF 42KB)

மேலும் பல
03

செ.வெ.எண்:195- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகையில் நடந்தே சென்று பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் பணி மேற்கொண்டார்

வெளியிடப்பட்ட நாள்: 09/04/2025

நீலகிரி மாவட்டம், உதகை இரயில் நிலைய முகப்பில் துவங்கி, சேரிங்கிராஸ் வழியாக அரசு தாவரவியல் பூங்கா வரை சுமார் 4 கி.மீ தூரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை நடந்தே சென்று பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கும் பணி மேற்கொண்டார்.(PDF 40KB)  

மேலும் பல
01

செ.வெ.எண்:194- நீலகிரி மாவட்டத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாபெரும் மரம் நடும் திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 19/04/2025

நீலகிரி மாவட்டத்தில், சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மாபெரும் மரம் நடும் திட்டத்தின் கீழ், மாண்புமிகு நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் / மாவட்ட நீதிபதி திரு.முரளிதரன் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்.(PDF 24KB)  

மேலும் பல
02

செ.வெ.எண்:193- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கிண்ணக்கொரையில் பாரம்பரிய உணவகத்தினை திறந்து வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 18/04/2025

நீலகிரி மாவட்டம், கிண்ணக்கொரையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், பாரம்பரிய உணவகத்தினை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.(PDF 25KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:192- இறகுபந்து விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு “SDAT – ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையத்தில்” பயிற்சி

வெளியிடப்பட்ட நாள்: 16/04/2025

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் இறகுபந்து விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவ மாணவியர்கள் தேர்வில் கலந்து கொண்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய “SDAT – ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையத்தில்” பயிற்சி பெற்று பயனடையுமாறும், “SDAT – ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையத்தில்” பயிற்சியளித்திட தகுதி வாய்ந்த இறகுபந்து பயிற்சியாளர்கள் விண்ணப்பித்திடுமாறு தெரிவித்துள்ளார்.(PDF 45KB)

மேலும் பல