ஊடக வெளியீடுகள்

Filter by:
DSC_0508 copy

செ.வெ.எண்.484- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 28.09.2026

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (28.09.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 157 மனுக்களை பெற்றுக் கொண்டார். (PDF 43KB)

DSC_0503 copy

செ.வெ.எண்:483- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி – 2026 சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்தார்

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026

நீலகிரி மாவட்டம், உதகை சேரிங்கிராஸ் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி – 2026 சிறப்பு தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், இன்று (28.09.2026) குத்து விளக்கேற்றி வைத்து, பார்வையிட்டு முதல் விற்பனையை துவக்கி வைத்தார். (PDF 48KB)  

DSC_0595 copy

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்கம்

வெளியிடப்பட்ட நாள்: 28/09/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் (28.09.2026) தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டம், உதகை, சேட் நினைவு அரசு மகப்பேறு மருத்துவமனையில், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தினை வழங்கினார். (PDF 482KB)  

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:482 – ஆகம குழுவினால் கண்டறியப்பட்ட திருக்கோயில்கள் குறித்து பொதுமக்கள் கருத்துகள் தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026

ஆகம குழுவினால் கண்டறியப்பட்ட திருக்கோயில்கள் குறித்து பொதுமக்கள் கருத்துகள் தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு  (PDF 44KB)

DSC_0411 copy

செ.வெ.எண்:481 – மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலர் அவர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026

நீலகிரி மாவட்டம் பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் இன்று (25.09.2026) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார். (PDF 26KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:479- முதியோர், விதவை மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் வங்கிக்கணக்கில் ஆதார் எண் இணைத்தல்.

வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026

ஆதார் எண்ணுடன் வங்கிக்கணக்கு இதுவரை இணைக்கப்படாத முதியோர், விதவை மற்றும் மாற்றுத்திறனாளி பயனாளிகள், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியை அணுகி ஆதார் எண் இணைப்பை மேற்கொள்ளுமாறு இதன் மூலம் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் (PDF 32KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:478- நியாய விலைக் கடைகளில் eKYC பதிவு மேற்கொள்ள 26.09.2026 அன்று சிறப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 25/09/2026

நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் பெற்று வரும் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகையினை தங்களது நியாய விலை கடையில் உள்ள POS இயந்திரத்தில் பதிவு செய்திட வேண்டும். (PDF 37KB)

5 copy

செ.வெ.எண்:477- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூடலூர் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026

நீலகிரி மாவட்டம், கூடலூர் ஊராட்சி ஒன்றியம் நெலாக்கோட்டை ஊராட்சி, தேவர்சோலை பேரூராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் இன்று (24.09.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்;. (PDF 60KB)

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:476- “பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதி” திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026

பிரதம மந்திரியின் கௌரவ உதவித் தொகை திட்டத்தில் மத்திய அரசால் விவசாய குடும்பத்திற்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000/-(ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) உதவித்தொகை என ஆண்டுக்கு மூன்று தவணையாக ரூ.6000/-(ரூபாய் ஆறாயிரம் மட்டும்) வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் பலர் தங்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்கப்படாமலும் e-KYC செய்யப்படாமலும், ஆதார் எண் இணைப்பு மற்றும் e-KYC நிலுவையிலும், மேலும் பல FR பதிவுகள் செய்யப்படாமலும் நிலுவையில் உள்ளதாக தெரியவருகிறது. பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெற விரும்பும் […]

படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:475- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-I (தொகுதி-I மற்றும் தொகுதி-IA) 27.09.2026 அன்று நடைபெறவுள்ளது.

வெளியிடப்பட்ட நாள்: 24/09/2026

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-I (தொகுதி-I மற்றும் தொகுதி-IA) பதவிகளுக்கான தேர்வு 27.09.2026 அன்று முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 04 தேர்வு மையங்களில் 1079 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். (PDF 45KB)