செ.வெ.எண்:658- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பத்திரிக்கையாளர்களுடனான காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 24/10/2024நீலகிரி மாவட்டத்தில், சர்வதேச காலநிலை நடவடிக்கை தினத்தினை (International Day of Climate Action) முன்னிட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில், உதகை தெற்கு வனச்சரகத்திற்குட்பட்ட கேர்ன்ஹில் பொருள் விளக்க மைய கூட்டரங்கத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள்; தலைமையில் காலநிலை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கலந்தாய்வு கூட்டம் பத்திரிக்கையாளர்களுடன் நடைபெற்றது.(PDF 25KB)
மேலும் பலசெ.வெ.எண்:657- மாண்புமிகு அரசு தலைமை கொறடா அவர்கள் தலைமையில் ரத்ததான முகாம் மற்றும் மரம் நடும் விழா
வெளியிடப்பட்ட நாள்: 24/10/2024நீலகிரி மாவட்டம், உதகை அகில இந்திய வானொலி, இந்திய செஞ்சிலுவை சங்கம், ரோட்டரி (மேற்கு) மற்றும் ரத்த வங்கி சார்பில் ரத்ததான முகாம் மற்றும் மரம் நடும் விழா நிகழ்ச்சி மாண்புமிகு அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 35KB)
மேலும் பலசெ.வெ.எண்:656- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கடினமாலா ஊராட்சியில் பழங்குடியினர்களுக்கான குடியிருப்பு கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 23/10/2024நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், கடினமாலா ஊராட்சியில் பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தின்கீழ் நிதி அயோக் மூலம் மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோழிக்குட்டை மற்றும் கொப்பையூர் ஆகிய பழங்குடியின கிராமத்தில் தலா ரூ.5.73 இலட்சம் வீதம் மொத்தம் ரூ.1.8 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பழங்குடியினர்களுக்கான குடியிருப்பு கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். (PDF 24KB)
மேலும் பலசெ.வெ.எண்:655- நீலகிரி மாவட்டத்தில் வன்கொடுமை நடக்கும் பட்சத்தில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வேண்டுகோள்
வெளியிடப்பட்ட நாள்: 23/10/2024பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் 2023-24 ஆம் ஆண்டு சட்ட சபையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல துறை அமைச்சர் மானிய கோரிக்கையின் போது ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமைகள் குறித்த புகார் அளிக்கவும் சட்ட ஆலோசனைகள் வழங்கவும் தொழிலநுட்ப வசதிகளுடன் கூடிய உதவி மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.(PDF 18KB)
மேலும் பலசெ.வெ.எண்:654- தமிழ்நாடு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2024தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.(PDF 30KB)
மேலும் பலசெ.வெ.எண்:653 – இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2024இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் (National Scholarship Portal) விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்கள்.(PDF 385KB)
மேலும் பலசெ.வெ.எண்:652- புத்தக ஆர்வலர்களால் தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகத்திற்கு பரிசு
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2024புத்தக ஆர்வலர்களால் தனிநபர் இல்லங்களில் பராமரிக்கப்படும் நூலகத்திற்கு பரிசு – செய்தி வெளியீடு. (PDF 46KB)
மேலும் பலசெ.வெ.எண்:651- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரம் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2024தீபாவளி மற்றும் கிருஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரம் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை. (PDF 43KB)
மேலும் பலசெ.வெ.எண்:650- நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-ம் ஆண்டிற்கான சேர்க்கைக்கான 31.10.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 22/10/2024நீலகிரி மாவட்டத்திலுள்ள அரசு மற்றும தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 31.10.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 14 வயது பூர்த்தி அடைந்த ஆண்கள்ஃபெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஆண்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40, பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. (PDF 40KB)
மேலும் பலசெ.வெ.எண்:649- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உயிர் நீத்த காவலர்களின் நினைவிடத்தில் வீர வணக்கம் செலுத்தினார்
வெளியிடப்பட்ட நாள்: 21/10/2024நீலகிரி மாவட்டம், உதகை காவலர் பயிற்சி ஆயுதப்படை(AR) மைதானத்தில் உயிர் நீத்த காவலர்களின் நினைவிடத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.(PDF 109KB)
மேலும் பல