செ.வெ.எண்:658- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி
வெளியிடப்பட்ட நாள்: 27/10/2025நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.(PDF 108KB)
மேலும் பலசெ.வெ.எண்:657- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.10.2025
வெளியிடப்பட்ட நாள்: 27/10/2025நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 123 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 108KB)
மேலும் பலசெ.வெ.எண்:656- பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் நடைபெறுதல்
வெளியிடப்பட்ட நாள்: 27/10/20252025ஆம் ஆண்டில் அண்ணல் காந்தியடிகள், ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாள்கள் தொடர்பில் நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு 04.11.2025, 05.11.2025 ஆகிய நாள்களில் நீலகிரி மாவட்டம், உதகை சி.எஸ்.ஐ. (சி.எம்.எம்.) மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன. (PDF 51KB)
மேலும் பலசெ.வெ.எண்:655- நீலகிரி மாவட்டத்தில் தேசிய வைட்டமின் “ஏ” குறைபாடு தடுப்பு திட்டம் முகாம் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 25/10/2025நீலகிரி மாவட்டத்தில் தேசிய வைட்டமின் “ஏ” குறைபாடு தடுப்பு திட்டம் முகாம் அக்டோபர் 27.10.2025 முதல் 31.10.2024 வரை நடைபெறுகிறது. மேலும் விடுப்பட்ட குழந்தைகளுக்கு 01.11.2025 அன்று வழங்கப்படவுள்ளது. இம்முகாமில் 6 மாதம் முதல் 1 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மில்லிகிராம் (One Lakh I.U) மற்றும் ஒருவயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 2 மில்லிலிட்டர் (Two Lakh I.U) வைட்டமின் “ஏ” திரவம் வழங்கப்படவுள்ளது.(PDF 427KB)
மேலும் பலசெ.வெ.எண்:654- இரயில்வே வாரியத்தால் பட்டப்படிப்பு கல்வித்தகுதிக்கு தொழில்நுட்பம் அல்லாத காலிப்பணியிடங்களுக்கு 20.11.2025 க்குள் விண்ணப்பிக்கலாம்
வெளியிடப்பட்ட நாள்: 24/10/2025இரயில்வே வாரியத்தால் பட்டப்படிப்பு கல்வித்தகுதிக்கு தொழில்நுட்பம் அல்லாத 5810 காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கையில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்று 18 முதல் 33 வயதிற்குட்பட்ட பொது பிரிவினருக்கும், 18 முதல் 38 வயதிற்குட்பட்ட பழங்குடியினர் மற்றும் பட்டியலின வகுப்பிற்க்கும், 18 முதல் 36 வயதினருக்குட்பட்ட இதர பிற்பட்ட வகுப்பினரும் www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் 20.11.2025 க்குள் விண்ணப்பிக்கலாம்.(PDF 44KB)
மேலும் பலசெ.வெ.எண்:653- அரசு தலைமைக்கொறடா அவர்கள் 4வது புத்தகத் திருவிழாவினை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 24/10/2025நீலகிரி மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் 4வது புத்தகத் திருவிழாவினை அரசு தலைமைக்கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் குத்துவிளக்கேற்றி, புத்தக அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் 2000 பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் தலா ரூ.150 மதிப்பிலான இலவச கூப்பன்களை வழங்கும் அடையாளமாக 10 மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்.(PDF 46KB)
மேலும் பலசெ.வெ.எண்:652- குன்னூர் வட்டாரத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்” 25.10.2025 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 24/10/2025“நலம் காக்கும் ஸ்டாலின்” 7-வது முகாமானது 25.10.2025 சனிக்கிழமை அன்று குன்னூர் வட்டாரத்திற்குட்பட்ட சிம்ஸ்பார்க் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் மேல் நிலைப்பள்ளியில் இம்முகாம் நடைபெறவுள்ளது.(PDF 48KB)
மேலும் பலசெ.வெ.எண்:651- நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு வார்டு கூட்டம் 27.10.2025, 28.10.2025 மற்றும் 29.10.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 23/10/2025நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து வார்டுகளிலும் வார்டு உறுப்பினர் தலைமையில் 27.10.2025, 28.10.2025 மற்றும் 29.10.2025 ஆகிய தேதிகளில் சிறப்பு வார்டு கூட்டம் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது.(PDF 423KB)
மேலும் பலசெ.வெ.எண்:650- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 4-வது புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 23/10/2025நீலகிரி மாவட்டத்தில்;, மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தவுள்ள 4வது புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 44KB)
மேலும் பலசெ.வெ.எண்:649- மாண்புமிகு தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் வழங்கப்படவுள்ள குடிநீர் திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 23/10/2025நீலகிரி மாவட்டம், உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் பயன்பாட்டிற்காக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ரூ.27.25 கோடி மதிப்பீட்டில் வழங்கப்படவுள்ள குடிநீர், திட்டப்பணிகளை, மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.(PDF 55KB)
மேலும் பல
