மூடு

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:737- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.12.2025 அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர்-2025 மாதத்தில் 19.12.2025 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.(PDF 28KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:736- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 01.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 129 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 56KB)  

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:735- நீலகிரி மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடை பொருட்கள் விநியோகம்

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் நீலகிரி மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத் திட்டப் பொருட்கள் டிசம்பர் 2025 மாதத்திற்கு  02.12.2025 மற்றும் 03.12.2025 ஆகிய நாட்களில் வழங்கப்படும். இத்திட்டத்தினை முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.(PDF 31KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:734- உதகை வட்டாரத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்” 29.11.2025 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 27/11/2025

“நலம் காக்கும் ஸ்டாலின்” 12-வது முகாமானது 29.11.2025 சனிக்கிழமை அன்று உதகை வட்டாரத்திற்குட்பட்ட ராக்லேண்ட், சாம்ராஜ்எஸ்டேட், சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளியில் இம்முகாம் நடைபெறவுள்ளது.(PDF 234KB)

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

செ.வெ.எண்:733- தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (TWEES)

வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு இலட்சம் மகளிரை தொழில் முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் ஒன்று செயல்படத்தப்படும், இத்திட்டத்தின் கீழ் 25 சதவீத மானியத்துடன் (அதிகபட்சம் ரூ.2.00 லட்சம்) 10 இலட்சம் வரை வங்கிக்கடன் பெற்று, மகளிர் பல்வேறு தொழில்கள் தொடங்கிட உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகள், விற்பனைக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும்.(PDF 75KB)

மேலும் பல

செ.வெ.எண்:732- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 76 வது அரசியலமைப்பு தின உறுதிமொழியினை அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றுக் கொண்டனர்

வெளியிடப்பட்ட நாள்: 26/11/2025

நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் 76 வது அரசியலமைப்பு தின உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.(PDF 42KB)

மேலும் பல
02

செ.வெ.எண்:731- மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 25/11/2025

நீலகிரி மாவட்டத்தில் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.(PDF 34KB)

மேலும் பல
01

செ.வெ.எண்:730- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.11.2025

வெளியிடப்பட்ட நாள்: 24/11/2025

நீலகிரி மாவட்டத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து 130 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 194KB)

மேலும் பல

செ.வெ.எண்:729- நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக கால்பந்து போட்டியின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு

வெளியிடப்பட்ட நாள்: 24/11/2025

நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களின் உத்தரவின்படி, மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 108 உதகமண்டலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எச்.ஏ.டி.பி விளையாட்டு, மைதானத்தில் நடைபெற்ற “THODA GUYS Vs KANDAL FOOT BALL ACADEMY” ஆகியோர்களுக்கிடையேயான கால்பந்து போட்டியினை வாக்காளர் பதிவு அலுவலர் /உதகை வருவாய் கோட்டாட்சியர் திரு.டினு அரவிந்த் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 406KB)

மேலும் பல
06

செ.வெ.எண்:728- நீலகிரி மாவட்டத்தில் உலக மாற்றத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது

வெளியிடப்பட்ட நாள்: 22/11/2025

நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், உலக மாற்றத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்ற ஓவியப்போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டார்.(PDF 30KB)

மேலும் பல