செ.வெ.எண்:103- மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு நிகழ்வு – 22.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 22/02/2025நீலகிரி மாவட்டத்தில், மாதந்தோறும் கடைசி சனிக்கிழமை மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு நிகழ்வு நடைப்பெறுகிறது. அதனையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் இன்று (22-02-2025) உதகை அரசு தாவரவியல் பூங்கா முன்பு சி.எஸ்.ஐ பொறியியல் கல்லூரி மாணவர்கள் நெகிழி கழிவின் பாதிப்பை பற்றி நாடகம் நடத்தி மற்றும் அதனை தவிர்த்திடம் வகையில், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்கள்.(PDF 31KB)
மேலும் பலசெ.வெ.எண்:102- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 22/02/2025நீலகிரி மாவட்டத்தில், உதகை எம்.பாலாடா ஏகலைவா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து, வகுப்பறை கட்டடங்களை பார்வையிட்டார்.(PDF 34KB)
மேலும் பலசெ.வெ.எண்:101- மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் 21.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025நீலகிரி மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 27 பயனாளிகளுக்கு ரூ.1.32 இலட்சம் மதிப்பில்; பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 32KB)
மேலும் பலசெ.வெ.எண்:100- விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025நீலகிரி மாவட்டத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலசெ.வெ.எண்:99- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் புதிய பகுதி நேர நியாய விலைக்கடைகளை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 21/02/2025நீலகிரி மாவட்டத்தில், புதிய பகுதி நேர நியாய விலைக்கடை மற்றும் புதிய நடமாடும் நியாய விலைக்கடை ஆகியவற்றை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள், அரசு தலைமை கொறடா திரு.கா.ராமச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.(PDF 34KB)
மேலும் பலசெ.வெ.எண்:98- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் செம்பகொல்லி பழங்குடியின கிராமத்திற்கு தார்சாலையை திறந்து வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களின் முயற்சியால் தேவர்சோலை பேரூராட்சி, செம்பகொல்லி பழங்குடியின கிராமத்திற்கு தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின்கீழ் ரூ.3.57 கோடி மதிப்பீட்டில் 4 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட தார்சாலைப்பணியினை உதகை நடைபெற்ற நிகழ்ச்சியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.(PDF 33KB)
மேலும் பலசெ.வெ.எண்:97- நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 20/02/2025நீலகிரி மாவட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 111KB)
மேலும் பலசெ.வெ.எண்:96- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கூடலூர் வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 19/02/2025நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, 15 பயனாளிகளுக்கு ரூ.93 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 90KB)
மேலும் பலசெ.வெ.எண்:94- தேயிலை விவசாயிகளுக்காக குறை கேட்பு முகாம் உதகை ஆவின் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2025தேயிலை விலை குறித்தான கோரிக்கை வைக்க விரும்பும் தேயிலை விவசாயிகளுக்காக வருகின்ற 25.02.2025 (செவ்வாய் கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நேரடி சந்திப்பு மற்றும் குறை கேட்பு முகாம் உதகை ஆவின் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.(PDF 199KB)
மேலும் பலசெ.வெ.எண்:93- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உதகை ஊராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 18/02/2025நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியத்தில், ரூ.2.47 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், நேரில் பார்வையிட்டு,ஆய்வு மேற்கொண்டார். (PDF 33KB)
மேலும் பல