செ.வெ.எண்:628- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பள்ளி மற்றும் பழங்குடியினர்களுக்கான வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 13/10/2025நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக ரூ.41.33 இலட்சம் மதிப்பில் 3 பள்ளி வாகனங்கள் மற்றும் ரூ.85 இலட்சம் மதிப்பில் பழங்குடியினர்களுக்கான 5 நடமாடும் மருத்துவ வாகனங்கள் என 8 வாகனங்களுக்கான சாவிகளை ஓட்டுநர்களிடம் வழங்கி, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலசெ.வெ.எண்:627- நீலகிரி மாவட்டத்தில் 14.10.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்
வெளியிடப்பட்ட நாள்: 13/10/202509.10.2025 அன்று “உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் நடைபெறும் இடங்கள்: கூடலூர் நகராட்சிக்குட்பட்ட வார்டு 19, 20 மற்றும் 21-ற்கான முகாம் கூடலூர் ஜானகியம்மாள் கல்யாண மண்டபத்திலும், கூடலூர் வட்டம், ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட வார்டு 7, 11, 14, 15, 16, 17, 18 -ற்கான முகாம் எல்லமலை சமுதாய கூடத்திலும், உதகமண்டலம் வட்டம், தூனேரி கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளான முகாம் மேல்தொரையட்டி சமுதாய கூடத்திலும், பந்தலூர் வட்டம். நெலாக்கோட்டை கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கான முகாம் குந்தலாடி பாத்திமா […]
மேலும் பலசெ.வெ.எண்:626- நீலகிரி மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான நேரடி நியமனத்தேர்வு நடைப்பெற்றது
வெளியிடப்பட்ட நாள்: 12/10/2025நீலகிரி மாவட்டத்தில் இன்று 12.10.2025(ஞாயிற்றுக்கிழமை) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடைப்பெற்ற முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை- 1 ஆகிய பணியிடங்களுக்கான நேரடி நியமனத்தேர்வு 6 மையங்களில் நடைப்பெற்றது. இத்தேர்வு சம்மந்தமாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை பார்வையிடும்போது முதன்மைக்கல்வி அலுவலர், உதகை வட்டாட்சியர் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். இத்தேர்விற்கு 1596 தேர்வர்கள் விண்ணப்பித்து 1476 தேர்வர்கள் தேர்வு எழுதினார்கள். இதில் 120 […]
மேலும் பலசெ.வெ.எண்:625- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உபதலை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
வெளியிடப்பட்ட நாள்: 11/10/2025நீலகிரி மாவட்டம் குன்னூர் ஊராட்சி ஒன்றியம், உபதலை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.(PDF 47KB)
மேலும் பலசெ.வெ.எண்:624- நீலகிரி மாவட்டத்தில் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் சினையுற்ற கறவை பசுக்களுக்கு “ஊட்டச் சத்து வழங்கும் திட்டம்”
வெளியிடப்பட்ட நாள்: 10/10/2025மாண்புமிகு முதலமைச்சரின் “தாயுமானவர்” திட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்டத்தில், தெரிவு செய்யப்பட்டுள்ள கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில், 100 ஊரக ஏழை கால்நடை விவசாயிகளின் சினையுற்ற கறவை பசுக்களுக்கு 50 சதவீத மானியத்துடன் “ஊட்டச் சத்து வழங்கும் திட்டம்” (அடர் தீவனம், தாது உப்புக்கள் மற்றும் விட்டமின்) செயல்படுத்தப்படுகிறது.(PDF 46KB)
மேலும் பலசெ.வெ.எண்:623- நீலகிரி மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித் தொகைபெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட நாள்: 10/10/2025தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாகச் சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகிறது. (PDF 160KB)
மேலும் பல“வாங்க கற்றுக்கொள்ளலாம்” என்னும் தலைப்பில் மக்களுக்கு கட்டணமில்லா இலவச தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி முகாம்
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2025நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் “வாங்க கற்றுக்கொள்ளலாம்” என்னும் தலைப்பில் மக்களுக்கு கட்டணமில்லா இலவச தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்களில் அக்டோபர் 11, 12 ஆகிய இரு நாட்கள் ஒரு மணி நேர பயிற்சி என்ற அடிப்படையில் காலை 10 மணி முதல் 11 மணி வரையிலும் பகல் 12 மணி முதல் 01 மணி […]
மேலும் பலசெ.வெ.எண்:622- தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் (NTCP) “புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 3.0”
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2025இந்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் (NTCP), 60 நாட்கள் “புகையிலை இல்லா இளைஞர் பிரச்சாரம் 3.0” (Tobacco Free Youth Campaign 3.0) 09 அக்டோபர் 2025 முதல் 08 டிசம்பர் 2025 வரை மாவட்ட அளவில் தேசிய புகையிலை கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் (NTCP) கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் அனைத்து மாவட்டத்திலும் துவங்கி வைக்க அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடச்சியாக, துணை சுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் […]
மேலும் பலசெ.வெ.எண்:620- கோத்தகிரி வட்டாரத்தில் “நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்” 11.10.2025 சனிக்கிழமை அன்று நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 09/10/2025“நலம் காக்கும் ஸ்டாலின்” 6-வது முகாமானது எதிர்வரும் 11.10.2025 சனிக்கிழமை அன்று நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி வட்டாரத்திற்குட்பட்ட அரவேணு ஆல்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.(PDF 30KB)
மேலும் பலசெ.வெ.எண்:619- 2025 -ம் ஆண்டு டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நடைபெறவுள்ளது
வெளியிடப்பட்ட நாள்: 09/10/20252025 -ம் ஆண்டு டிசம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு (Wireman Helper Competency Examination) நடைபெறவுள்ளது. இது குறித்து தகுதி வாய்ந்த கம்பியாள் உதவியாளர்களிடமிருந்தும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையிடமிருந்தும் நடத்தப்பட்ட தொழிலாளர்களுக்கான மாலை நேர வகுப்பில் மின்கம்பியாள் பிரிவில் பயிற்சி பெற்று தேறியவர்களிடமிருந்தும் மற்றும் தேசிய புனரமைப்புத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் நடத்தப்பட்ட மின்சாரப் பணியாளர் மற்றும் கம்பியாளர் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.(PDF […]
மேலும் பல
