மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியருக்கான கல்வி உதவித்தொகை

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் 2023-2024-ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை

17/10/2023 15/01/2024 பார்க்க (126 KB)
இந்திய இராணுவத்தில் அக்னிவீர் படைப்பிரிவில் ஆள் சேர்ப்பு முகாம்

இந்திய இராணுவத்தில் அக்னிவீர் படைப்பிரிவில் பல்வேறு பணிகளுக்கான ஆள் சேர்ப்பு முகாம் சென்னை இராணுவ தலைமை அலுவலகத்தால் 04.01.2024 முதல் 13.01.2024 வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

04/01/2024 13/01/2024 பார்க்க (113 KB)
‘மக்களுடன் முதல்வர்’ சிறப்பு திட்டம்

மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்டமானது பொது மக்களின் கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணும் வகையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமாகும். நீலகிரி மாவட்டத்தில் இத்திட்டமானது 18.12.2023 முதல் 06.01.2024 வரை அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நடைபெற உள்ளது.

18/12/2023 06/01/2024 பார்க்க (33 KB)
சிறந்த பெண் குழந்தைக்கான விருது 2024

தகுதியான பெண் குழந்தைகளிடமிருந்து இவ்விருத்துக்கான விண்ணப்ப விவரங்களை தமிழ்நாடு அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 16.12.2023 முதல் 31.12.2023 வரை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இணையதளத்தில் பதிவு செய்த பிறகு அனைத்து ஆவணங்களையும் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகம், பிங்கர் போஸ்ட், உதகை என்ற முகவரிக்கு கையேடாக (Booklet) தயார் செய்து தமிழ் (ம) ஆங்கிலத்தில் அச்சு செய்யப்பட்ட தலா 2 நகல்கள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

16/12/2023 31/12/2023 பார்க்க (74 KB)
தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம்

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956 ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 18.12.2023 முதல் 27.12.2023 வரை நீலகிரி மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்கு “ஆட்சிமொழிச் சட்ட வாரம்” கொண்டாடப்பட உள்ளது.

18/12/2023 27/12/2023 பார்க்க (36 KB)
இரவு காவலர்

நீலகிரி மாவட்டத்தில், குன்னூர்  ஊராட்சி ஒன்றியத்தில் இரவு காவலர் பணியிடம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

30/11/2023 20/12/2023 பார்க்க (337 KB)
அலுவலக உதவியாளர்

நீலகிரி மாவட்டத்தில், குன்னூர்  ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

30/11/2023 20/12/2023 பார்க்க (338 KB)
ஈப்பு ஓட்டுநர் காலிப்பணியிடம்

நீலகிரி மாவட்ட  நீர்வளத்துறையில் காலியாகவுள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப, விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

02/11/2023 30/11/2023 பார்க்க (236 KB)
குழந்தைகள் உரிமைக்கு எதிரான குறைதீர்க்கும் கூட்டம்

தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழு மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் குழந்தைகள் உரிமைக்கு எதிரான குறைதீர்க்கும் கூட்டம், கோத்தகிரி, வெள்ள நிவாரண மையம், புயல் நிவாரண கட்டிடம், காந்தி மைதானத்தில் 28.11.2023 அன்று காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெற உள்ளது.

28/11/2023 28/11/2023 பார்க்க (136 KB)
இரவு காவலர்

நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் இரவு காவலர் பணியிடம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

17/11/2023 26/11/2023 பார்க்க (728 KB)