மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
உழவர் கடன் அட்டை பெற சிறப்பு முகாம்

நீலகிரி மாவட்டத்தில் உழவர் கடன் அட்டை பெறாத தகுதியான 15,698 விவசாயிகள் உள்ளனர். எனவே, நீலகிரி மாவட்ட விவசாயிகள் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு உழவர் கடன் அட்டை பெற விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

19/10/2023 16/11/2023 பார்க்க (115 KB)
மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் உதகமண்டல ஊரக வாழ்வாதார இயக்கம் / மகளிர் திட்டம் இணைந்து 04.11.2023 அன்று உதகை அரசினர் கலை கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களும் பங்கேற்று பணிநியமன ஆணைகள் வழங்க உள்ளார்கள்.

04/11/2023 04/11/2023 பார்க்க (119 KB)
பெண் குழந்தைக்கான மாநில விருது

தமிழக அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் ‘பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும்இ அனைத்து பெண் குழந்தைகளும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும்இ பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும்இ பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும்இ பாடுபட்டு வீரதீர செயல்புரிந்து வரும் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் முகமாக அதற்கான மாநில விருது ஒன்றை அறிவித்து அரசாணை பிறப்பித்து கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
இதன்படி வருடந்தோறும் மேற்குறிப்பிட்டவாறு சேவை புரிந்து வரும் சிறந்த குழந்தை ஒருவருக்கு தேசிய பெண் குழந்தை தினத்தில் (ஜனவரி 24) பாராட்டு பத்திரமும், ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

25/09/2023 30/10/2023 பார்க்க (49 KB)
புத்தகத் திருவிழா 2023-2024

நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் புத்தகத் திருவிழா 2023-2024 எதிர்வரும் 20.10.2023 முதல் 29.10.2023 வரை உதகமண்டலம், பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது. இப்புத்தகத் திருவிழாவில் சுமார் 50-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. மேலும் இப்புத்தகத் திருவிழா நடைபெறும் அனைத்து நாட்களிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இலக்கிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சிகளில் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பிக்க உள்ளனர். இப்புத்தக திருவிழாவில் உணவகங்கங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்கங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன. இப்புத்தகத் திருவிழாவானது மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களின் புத்தக வாசிப்பு பழக்கத்தினை அதிகப்படுத்தும் நோக்கத்திற்காக நடைபெறவுள்ளது. அனைவருக்கும் அனுமதி இலவசம். எனவே இவ்விழாவில் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

20/10/2023 29/10/2023 பார்க்க (29 KB)
தற்காலிகப் பட்டாசுக்கடை உரிமம்

தீபாவளி பண்டிகை எதிர்வரும் 12.11.2023 அன்று கொண்டாடப்படவுள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தற்காலிகப் பட்டாசுக்கடைகள் நடத்திட விருப்பம் உள்ளவர்கள் வெடிபொருட்கள் சட்டம் 1884 மற்றும் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிகப் பட்டாசு உரிமம் பெற்றிட ஒற்றைச்சாளர முறையில் (Single Window System) இணையதளம் வழியாக மட்டுமே விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட வேண்டும். மேற்படி உரிமத்தினைப் பெறுவதற்கு தங்களது விண்ணப்பத்தினை 22.10.2023 – ஆம் தேதிக்குள் இ-சேவை மையங்கள் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

03/10/2023 22/10/2023 பார்க்க (52 KB)
மாதிரி சோதனை பேரிடர் கால எச்சரிக்கை செய்தி 20.10.2023 அன்று செல்பேசிகளுக்கு அனுப்பப்பட உள்ளது

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் அகில இந்திய அவசர எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபார்க்க இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையால் செல் ஒளிபரப்பு அமைப்பு மூலம் மாதிரி சோதனை பேரிடர் கால எச்சரிக்கை செய்தி 20.10.2023 அன்று செல்பேசிகளுக்கு அனுப்பப்பட உள்ளது.

20/10/2023 20/10/2023 பார்க்க (34 KB)
மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம்

நீலகிரி மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் இணைந்து 2023 – 2024 ஆம் ஆண்டில் உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் கீழ் 0 முதல் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் குறிப்பிட்டுள்ள இடங்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமிற்கு நீலகிரி மாவட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்று, தேவைப்படும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் அறுவைசிகிச்சை பரிந்துரை செய்யப்படவுள்ளனர்.

09/10/2023 12/10/2023 பார்க்க (34 KB)
தமிழ்ச் செம்மல் விருது – 2023

தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்கள் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்துவதற்காக தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தேர்வு செய்து அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. விருது பெறுபவர்களுக்கு ரூ.25000/- பரிசுத்தொகை மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும். 2023-ஆம் ஆண்டிற்கு தமிழ்ச்செம்மல் விருதுக்கான விண்ணப்பங்களை நீலகிரி மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

16/09/2023 10/10/2023 பார்க்க (84 KB)
கிராமசபைக் கூட்டம்

காந்தி ஜெயந்தி தினமான 02.10.2023 அன்று நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11.00 மணி அளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறும்.

02/10/2023 02/10/2023 பார்க்க (27 KB)
புதிய மாவட்ட காஜி

புதிய காஜி நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்களின் புகைப்படத்துடன் கூடிய சுய விவரக் குறிப்புகள் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் ஆகிய விவரங்களுடன் 29.09.2023-க்குள் பிங்கர் போஸ்டில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

16/09/2023 29/09/2023 பார்க்க (50 KB)