அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மாதிரி சோதனை பேரிடர் கால எச்சரிக்கை செய்தி 20.10.2023 அன்று செல்பேசிகளுக்கு அனுப்பப்பட உள்ளது | தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் செயல்படுத்தப்படும் அகில இந்திய அவசர எச்சரிக்கை அமைப்பின் செயல்பாட்டை சரிபார்க்க இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையால் செல் ஒளிபரப்பு அமைப்பு மூலம் மாதிரி சோதனை பேரிடர் கால எச்சரிக்கை செய்தி 20.10.2023 அன்று செல்பேசிகளுக்கு அனுப்பப்பட உள்ளது. |
20/10/2023 | 20/10/2023 | பார்க்க (34 KB) |
மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் | நீலகிரி மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகம் இணைந்து 2023 – 2024 ஆம் ஆண்டில் உள்ளடக்கிய கல்வித் திட்டத்தின் கீழ் 0 முதல் 18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு இலவச மருத்துவ முகாம் குறிப்பிட்டுள்ள இடங்களில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமிற்கு நீலகிரி மாவட்ட அரசு மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்று, தேவைப்படும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் மற்றும் அறுவைசிகிச்சை பரிந்துரை செய்யப்படவுள்ளனர். |
09/10/2023 | 12/10/2023 | பார்க்க (34 KB) |
தமிழ்ச் செம்மல் விருது – 2023 | தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்கள் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்துவதற்காக தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தேர்வு செய்து அவர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. விருது பெறுபவர்களுக்கு ரூ.25000/- பரிசுத்தொகை மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும். 2023-ஆம் ஆண்டிற்கு தமிழ்ச்செம்மல் விருதுக்கான விண்ணப்பங்களை நீலகிரி மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. |
16/09/2023 | 10/10/2023 | பார்க்க (84 KB) |
கிராமசபைக் கூட்டம் | காந்தி ஜெயந்தி தினமான 02.10.2023 அன்று நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11.00 மணி அளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறும். |
02/10/2023 | 02/10/2023 | பார்க்க (27 KB) |
புதிய மாவட்ட காஜி | புதிய காஜி நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்களின் புகைப்படத்துடன் கூடிய சுய விவரக் குறிப்புகள் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் ஆகிய விவரங்களுடன் 29.09.2023-க்குள் பிங்கர் போஸ்டில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார். |
16/09/2023 | 29/09/2023 | பார்க்க (50 KB) |
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் | நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 2023-ம் மாதத்தில் 22.09.2023 அன்று காலை 11.00 மணிக்கு விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் உதகமண்டலம், பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. |
22/09/2023 | 22/09/2023 | பார்க்க (45 KB) |
அகில இந்திய தொழிற்தேர்வு | 2024 -ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் (NCEVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
13/09/2023 | 18/09/2023 | பார்க்க (59 KB) |
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 2023 | 2023-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. |
28/07/2023 | 15/09/2023 | பார்க்க (35 KB) |
தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை | தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு செல்லும் சாலையினை பழுது பார்க்கும் பணிகள் வன துறை மூலமாக 11.09.2023 முதல் 13.09.2023 வரை (திங்கள், செவ்வாய் மற்றும் புதன்) ஆகிய மூன்று நாட்களில் நடைபெற உள்ளது. |
11/09/2023 | 13/09/2023 | பார்க்க (17 KB) |
அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் | நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் தற்காலிகமாக இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12000/- பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000/- மாதத் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட ஆணை வரப் பெற்றுள்ளது. |
01/09/2023 | 06/09/2023 | பார்க்க (53 KB) |