மூடு

வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
இரவு காவலர்

நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் இரவு காவலர் பணியிடம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

17/11/2023 26/11/2023 பார்க்க (728 KB)
புதிய மாவட்ட காஜி

புதிய காஜி நியமனம் செய்வதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்களின் புகைப்படத்துடன் கூடிய சுய விவரக் குறிப்புகள் மற்றும் கல்விச் சான்றிதழ்கள் ஆகிய விவரங்களுடன் 29.09.2023-க்குள் பிங்கர் போஸ்டில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலத்தில் நேரில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா, இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்.

16/09/2023 29/09/2023 பார்க்க (50 KB)
அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம்

நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும் தொடக்கப் பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் தற்காலிகமாக இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12000/- பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000/- மாதத் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட ஆணை வரப் பெற்றுள்ளது.

01/09/2023 06/09/2023 பார்க்க (53 KB)
அரசு பழங்குடியினர் நல பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம்

நீலகிரி மாவட்டத்தில், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலை/உயர்நிலை/நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களில் தற்காலிகமாக இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12000/- பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000/- மாதத் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட ஆணை வரப் பெற்றுள்ளது.

02/09/2023 06/09/2023 பார்க்க (45 KB)
சமூக நல தனியாளர்

நீலகிரி மாவட்டம் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre)-க்கு சமூக நல தனியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்ய உள்ளதால், தகுதிகளுடன் உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

26/08/2023 05/09/2023 பார்க்க (44 KB)
வட்டார ஒருங்கிணைப்பாளர்

குன்னூர் மற்றும் கோத்தகிரி வட்டாரத்தில் தற்போது காலியாக உள்ள இரண்டு வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்காணும் தகுதி உள்ளவர்களிடமிருந்து விண்ணபங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்கள் இணை இயக்குநர்/திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம், 1பி பிளாக், கூடுதல் மாவட்டஆட்சியர் வளாகம், பிங்கர் போஸ்ட், உதகை, நீலகிரிமாவட்டம் 643 005 என்ற முகவரிக்கு 28.08.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் வந்து சேர வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

22/08/2023 28/08/2023 பார்க்க (49 KB)
சட்டத்துடன் இணைந்த நன்னடத்தை அலுவலர்

நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சட்டத்துடன் இணைந்த நன்னடத்தை அலுவலர்(Legal cum Probation Officer) பணியினை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

02/08/2023 18/08/2023 பார்க்க (68 KB)
தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்கள்

நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் உதகை மு.பாலாடா ஏகலைவா மாதிரி உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளிக்கு ஆசிரியர் தற்காலிகமாக தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

11/08/2023 18/08/2023 பார்க்க (45 KB)
இந்திய விமானப்படையின் அக்னி வீர்வாயு வேலைவாய்ப்பு திட்டம்

இந்திய விமானப்படையின் 01/2024 அக்னி வீர்வாயு (Agniveervayu) வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியில் இணைய விருப்பமுள்ள (ஆண் மற்றும் பெண் ஆர்வலர்கள் தங்களின் விண்ணப்பங்களை 17.08.2023 வரை இணையதளம் மூலமாக இந்திய விமானப்படை https://agnipathvayu.cdac.in என்ற வளைதளத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி பதிவேற்றம் செய்துகொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

03/08/2023 17/08/2023 பார்க்க (38 KB)
பெண் பாதுகாப்பு அலுவலர்

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005-ன் கீழ் பணிபுரிய நீலகிரி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.

03/08/2023 16/08/2023 பார்க்க (28 KB)