மூடு

வேலைவாய்ப்புகள்

வேலைவாய்ப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
சாலை ஆய்வாளர் பணியிடம் நேரடி நியமனம்

நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், பொறியியல் பிரிவில் காலியாக உள்ள சாலை ஆய்வாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடும் பொருட்டு, நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் ந.க.எண்.1216/2020/டி1 நாள்.23/01/2020ன்படி வெளியிடப்பட்ட அறிவிக்கை நிர்வாக காரணங்களால் இரத்து செய்யப்படுகிறது எனத்தெரிவிக்கப்படுகிறது.

12/01/2023 31/03/2023 பார்க்க (221 KB)
பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடம் நேரடி நியமனம்

நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், பொறியியல் பிரிவில் காலியாக உள்ள பணிப்பார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடும் பொருட்டு, நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் ந.க.எண்.18217/2020/டி1 நாள்.04/11/2020ன்படி வெளியிடப்பட்ட அறிவிக்கை நிர்வாக காரணங்களால் இரத்து செய்யப்படுகிறது எனத்தெரிவிக்கப்படுகிறது.

12/01/2023 31/03/2023 பார்க்க (240 KB)
இரவு காவலர்

நீலகிரி மாவட்டத்தில், குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் இரவு காவலர் பணியிடம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

06/02/2023 17/02/2023 பார்க்க (127 KB)
மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை வேலைவாய்ப்பு

நீலகிரி மாவட்டத்தில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள கீழ் கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  1. மருத்துவ அலுவலர்
  2. பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் நிலை -2
  3. மருத்துவமனை பணியாளர்
  4. பகுதி சுகாதார செவிலியர் / நகர்புற சுகாதார மேளாலர்
  5. நகர்புற சுகாதார செவிலியர் மற்றும்
  6. நடமாடும் மருத்துவ குளு உதவியாளர்
02/02/2023 13/02/2023 பார்க்க (386 KB)
இரவு காவலர்

நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் இரவு காவலர் பணியிடம் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

27/01/2023 10/02/2023 பார்க்க (840 KB)
வட்டார ஒருங்கிணைப்பாளர்

நீலகிரி மாவட்டத்தில், கூடலுர் வட்டாரத்திற்குட்பட்ட ஸ்ரீமதுரை ஊராட்சி மற்றும் நெலாக்கோட்டை ஊராட்சியில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

31/01/2023 07/02/2023 பார்க்க (188 KB)
செவிலியர் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்

நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் துணை சுகாதார நிலையம் – நலவாழ்வு மையங்களில் (HWC- HSCs) உள்ள செவிலியர் மற்றும்  இடைநிலை சுகாதார பணியாளர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

12/01/2023 27/01/2023 பார்க்க (441 KB)
நீலகிரி மாவட்டத்தில் மின் மாவட்ட மேலாளர் ஆன்லைன் தேர்வுக்கான விண்ணப்பதாரர்கள்

நீலகிரி மாவட்டத்தில் மின் மாவட்ட மேலாளர் ஆன்லைன் தேர்வுக்கான விண்ணப்பதாரர்கள்.

02/11/2022 12/11/2022 பார்க்க (403 KB)
மின் மாவட்ட மேலாளர்
  • விண்ணப்பிக்க கடைசி நாள் – 28.10.2022 மாலை 6 மணி வரை
  • தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் விபரம் வெளியிடப்படும் நாள் – 02.11.2022
  • தேர்வு நடைபெறும் நாள் – 12.11.2022
  • தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் – 12.11.2022 மாலை
14/10/2022 28/10/2022 பார்க்க (112 KB)
லேப் டெக்னீஷியன் & பார்மசிஸ்ட்

நீலகிரி மாவட்டம், மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிய தகுதியான விண்ணப்பதாரரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது.

22/08/2022 01/09/2022 பார்க்க (657 KB)